காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!

AUAB தலைவர்களுக்கும்  தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது .  BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம்   ஒதுக்கீடு,  ஓய்வூதிய மாற்றம் ,  BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலைத் தொடர்பு செயலாளரின் பதிலை  AUAB தலைவர்கள் ஏற்கவில்லை .

இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன்  விவாதிப்பதிற்கான  வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு  செய்துள்ளது.

மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நாளை(03 12 2018) 10.00 மணிக்கு  நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல்   நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் .

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திட  கிளை செயலாளர்கள் மற்றும் மாவட்டநிர்வாகிகள் தோழமை சங்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவருக்கும் AUAB சார்பாக வாழ்த்துக்கள்.

 

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31