5 நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் வங்கிக்கு ஏஏ பிளஸ் தரச்சான்று

5 நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் வங்கிக்கு ஏஏ பிளஸ் தரச்சான்று

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புதிய மேம்பாட்டு வங்கிக்கு (என்டிபி) ஏஏ பிளஸ் தரச்சான்று வழங்கப் பட்டுள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப் பிரிக்கா ஆகிய நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக் கிய வங்கிதான் என்டிபி எனப்படும் புதிய மேம்பாட்டு வங்கியாகும்.

இதற்கு முதுபெரும் வங்கி யாளர் கே.வி. காமத் தலைவ ராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2014-ம் ஆண்டு வங்கி தொடங்க திட்டமிடப்பட்டு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் செயல்பட ஆரம்பித்தது.

சர்வதேச தரச்சான்று நிறு வனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறு வனம் இந்த வங் கிக்கு ஏஏ பிளஸ் தரச் சான்றை வழங்கியுள்ளது. வங்கிகளுக்கான தரச்சான்றில் மிகவும் முதன்மையானது ஏஏஏ ஆகும். இதற்கு அடுத்து ஏஏ பிளஸ் உள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் பிட்ச் தரச்சான்று நிறுவனமும் என்டிபி-க்கு ஏஏ பிளஸ் தரச்சான்றை அளித்தது குறிப்பிடத்தக்கது.

நிதியுதவி

என்டிபி செயல்பாடுகளுக்கு இத்தகைய தரச்சான்று மிகச் சிறந்த அங்கீகாரமாகும் என்று காமத் தெரிவித்துள்ளார். இந்த வங்கி ஐந்து நாடு களில் பசுமை சூழ் கட்ட மைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

August 2018
M T W T F S S
« Jul   Sep »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031