சட்டவிரோதப் பரிவர்த்தனை ஜிஎஸ்டிக்குப் பின் உயர்ந்துவிட்டதாமே!

சட்டவிரோதப் பரிவர்த்தனை ஜிஎஸ்டிக்குப் பின் உயர்ந்துவிட்டதாமே!

புதுதில்லி, ஜூன் 22-ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளின் எண் ணிக்கை 5 மடங்கு அதிகரித்து விட்டதாகத் தெரியவந்துள்ளது.நாட்டில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த் தனை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக் கவே பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு வந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், பண மதிப்புநீக்கம், கறுப்புப் பணத்தையெல்லாம் வெள்ளையாக்கியதுதான் மிச்சம் என்றாகி விட்டது. இப்போது, ஜிஎஸ்டி-யின் நோக்கமும் நிறைவேறவில்லை என்பது தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பு தடுக் கப்படவில்லை என்பதோடு, முன்பைவிட சட்டவிரோத பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.குறிப்பாக, கட்டுமானத் துறையில், பில்களை (ரசீதுகள்) விற்பனை செய்வது வழக்கம் என்றாலும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பில் விற்பனை முறைஐந்து மடங்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பொருள் உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து, முறையாக வரி செலுத்தி சரக்குகளைப் பெறும் ஒருடீலர், இதற்கான ரசீதை,வேறொரு தனியார் கட்டுமான நிறுவனத்திடமோ, அரசு காண்ட்ராக்டரிடமோ விற்பனை செய்வதாகவும், அந்த ரசீதை வாங்குபவர்கள் வேறொரு உற்பத்தியாளரிடமிருந்து பொருட்களைக் குறைவான விலைக்குவரி செலுத்தாமல் வாங்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்தது என்றாலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப் பட்ட பிறகு இந்த நடவடிக்கைகள் நான்கு முதல்ஐந்து மடங்காக உயர்ந்துவிட்டது என்று கூறப்படுகிறது.இவ்வாறு ஜிஎஸ்டி வரி செலுத்தி, பொருட்களை வாங்கிய சில சில்லறைவர்த்தகர்கள், டீலர்ஷிப்பில்நடக்கும் வரி ஏய்ப்பைப்பயன்படுத்தி, அவர்களிடமேகுறைவான விலையில் பொருட்களை வாங்கிக் கொள்வதாகவும் இப்பொருட்கள் எந்தவிதத் தடையுமின்றி மாநிலங்களுக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுவதாகவும் மின்னணு சரக்கு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மோடி சொன்ன அத்தனையும் பொய்யாகி விட்டது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

June 2018
M T W T F S S
« May   Jul »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930