சுட்டெரிக்கும் வெயில், காலில் சொட்டும் ரத்தம், தளராத உறுதி விவசாயிகள் மும்பைக்குள் நுழைந்தனர்

சுட்டெரிக்கும் வெயில், காலில் சொட்டும் ரத்தம், தளராத உறுதி விவசாயிகள் மும்பைக்குள் நுழைந்தனர்

மும்பை, மார்ச் 11-200 கிலோமீட்டர் பயணித்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் தலைநகர் மும்பைக்குள் ஞாயிறன்று நுழைந்தனர். அவர்களுக்கு மும்பை நகர மக்கள் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுத்து உற்சாக மாக வரவேற்றனர்.மும்பையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஆனந்த் நகரிலிருந்து ஞாயிறன்று ஆறாவது நாள் பயணத்தை விவசாயிகள் துவங்கியபோது பலரது காலணிகள் ஏற்கனவேஅறுந்துவிட்ட நிலையில் வெறும் காலில் நடந்தனர். சுட்டெரிக்கும் வெயிலால் காலில்வெடிப்புகள் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. ஆனாலும் தளராத உறுதியோடு நெடும்பய ணத்தில் முழக்கமிட்டு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட 4 லட்சம் விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 76 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. மோடி அரசு தீவிரமாக அமல்படுத்திவரும் நவீன தாராளமய கொள்கைகளால் விவசாயிகள் மேலும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராக விவசாயிகள் கடந்த ஆண்டு நடத்திய 11 நாள் பல்வேறு விவசாயஅமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்தின. அப்போது மாநில பாஜக அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக அவர்களது நிலங்கள் பறிக்கப்படுவதை கைவிட வேண்டும். விவசாயிகளின் விருப்ப த்துடன் கையகப்படுத்தும் நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு நியாய மான விலை வழங்க வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஏழைகளுக்கு வழங்கும் ரேசனை தொடர வேண்டும். விவசாயிகளை பாதுகாப்பதற்கான திட்டங்களை அமல் படுத்தி தற்கொலையிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த நெடும்பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விதான் பவன் என்கிற மகாராஷ்டிர மாநிலத்தின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட மும்பை நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாயன்று நாக்பூரில் தொடங்கிய இந்த நெடும்பயணம் 200 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கிறது. செங்கொடியும், சிவப்பு தொப்பியுமாக வரும் விவசாயிகளுக்கு வழியெங்கும் மக்கள்வரவேற்பு அளிப்பதோடு ஆயிரம் ஆயிரமாக புதிய பகுதி விவசாயிகள் இணைந்து அவர்களுடன் நடக்கிறார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்தி வரும் இந்த நெடும்பயணத்திற்கு பல்வேறு அமைப்பு களும், அரசியல் கட்சியினரும் பேராதரவு அளித்து வருகின்றனர். பெரும் படையாக வந்துகொண்டிருக்கும் நெடும்பயணம் நகருக்குள் நுழையும்போதே தடுத்து நிறுத்த அரசும், காவல்துறையும் தயாராக இருந்தது.ஞாயிறு மாலை நகருக்குள் நுழைந்த விவசாயிகளை மும்பை மக்கள் உற்சாக மாக வரவேற்றனர். திங்களன்று விதான் பவனில் விவசாயி கள் சங்க தலைவர்களான அசோக் தாவ்லே,அம்ராராம், விஜு கிருஷ்ணன், ஹன்னன் முல்லா, ஜிதேந்திர சௌத்திரி எம்.பி, கே.கே. ராகேஷ் எம்பி, பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசய்ய ஆதம், மகேந்திரசிங், மரியம் தாவ்லே உள்ளிட்டோர் விவசாயிகளை வர வேற்று உடன் செல்ல உள்ளனர்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031