அன்புத்தோழர்களே ,

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தமிழ் நாட்டிலேயே நாகர்கோவில் மாவட்டத்தில் தான் முதன் முறையாக நவம்பர் 2005 ல் EPF விதிகள் அமுல்படுத்தப்பட்டன. அன்றைய மாவட்ட நிர்வாகம், மாநிலச் சங்கம், அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் தோழர் A.V.பெல்லார்மின் ஆகியோர் நன்றிக்கு உரியவராவார்கள். இருந்த போதிலும் 01 10 2000 முதல் 31 10 2005 வரை EPF விடுபட்டிருந்தது.

நம்முடைய தொடர் முயற்சியின் காரண்மாக , 01 10 200O ல் பணியில் இருந்த 87 தோழர்களுக்கும் EPF அமுல் படுத்தும் படி நாகர்கோவில் EPF Commissioner உத்தரவிட்டுள்ளார். சுமார் 18 83 033 ரூபாயை ஒருவார காலத்திற்குள் BSNL மாவட்டநிர்வாகம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் மாவாட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உத்தரவு.87 ஊழியர்களின் பட்டியல் கீழே தர்ப்பட்டுள்ளது.

இன்று EPF Commissioner அழைத்ததின் பெயரில் மாவட்ட செயலர் தோழர் A. செல்வம், மாநில உதவிச் செய்லர் தோழர் C. பழனிச்சாமி ஆகியோர் அலுவலக்த்திற்கு சென்றிருந்தனர். அந்த 87 ஊழியர்களுக்கும் தங்களுடைய தற்போதைய முகவரி, EPF எண், UAN, AADHAR CARD நகல் தேவைப்படுகின்றது. 87 ஊழியர்களும் அந்த விவரங்களை TNTCWU / BSNLEU கிளைச்செயலர்களிடம் அளிக்க வேண்டும் அவை நாகர்கோவில் EPF அலுவ்லக்த்திடம் TNTCWU / BSNLEU மாவட்டச்சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் நீதி மன்றம் செல்லுவதற்கு முன் நாம் அவசரமாக செயல்பட வேண்டும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031