பிஎஸ்என்எல் சேவை மையங்களில் குவியும் ஏர்செல் சந்தாதாரர்கள்

பிஎஸ்என்எல் சேவை மையங்களில் குவியும் ஏர்செல் சந்தாதாரர்கள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஏர்செல் சந்தாதாரர்கள் கூட்டம் அலை மோதுகிறது.தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்திற்குட்பட்ட மன்னார்குடி பிஎஸ்என்எல் உட்கோட்ட அலுவலகத்தின் முன்பு பிப்ரவரி 24 ஆம் தேதியிலிருந்து அன்றாடம் சராசரியாக 350 ஏர்செல் சந்தாதாரர்கள் அதே எண்ணில் பிஎஸ்என்எல் சேவை யை பெற வேண்டி மொபைல் எண் பெயர்ச்சிக்காக (மொபைல் நம்பர் போர்டபிளிட்டி) வந்த வண்ணம் உள்ளனர்.

ஜியோவின் நியாயமற்ற போட்டியின் காரணமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏர்செல்லின் தொலைத்தொடர்பு கார்ப்பரேட் வணிகம் மூழ்கத்துவங்கியது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைத்தொடர்பு இணைப்பை திடீரென இழந்தனர். வங்கிப் பண பரிமாற்றங்கள், கட்டணம் செலுத்தும் பணிகள் முடங்கின. சந்தாதாரர்கள் மாற்றுச் சேவையை பெறுவதற்கு இதர தொலைத்தொடர்பு சேவை நிறுவனங் களுக்கு மாறத் துவங்கினர்.

நீங்கள் ஏன் பிஎஸ்என்எல்-ஐ தேர்வு செய்தீர்கள்என வரிசையில் நின்ற ஏர்செல் வாடிக்கையாளர் ஒருவரைக் கேட்டபோது, “நான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர். விடுப்பில் ஊருக்குவந்திருந்தேன். ஏர்செல் துண்டிக்கப் பட்டதால் எனது வேலை தொகுப்பை நிறுவனத்திற்கு அனுப்பமுடியாமல் திகைத்து நின்றபோது பக்கத்து வீட்டிலிருந்து வாங்கிய பிஎஸ்என்எல் டேட்டா சிம் கார்டும் மோடம் டேங்கிளும்தான் உடனே எனக்கு உதவியது. நான் இங்கே வருவதற்கு இதுபோதாதா. இப்போது ஏர்செல், நாளைஎந்த நிறுவனம் மூழ்கும் என்று சொல்லமுடியாது.

ஏர்செல் சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் அல்லது ஜியோவிற்குத் தான் பெரும்பாலும் மாறுகிறார்கள். ஆனால் வானில் பிரம்மாண்டமான லேசர் பிம்பமாக தெரியும் ஜியோ 2019 இல் மோடி அரசு மாறும்போது என்னவாகும் என்று சொல்லமுடியாது. அதனால்தான் நேரடி யாக இங்கு வந்துவிட்டேன்.இதோ பிஎஸ்என்எல் அலுவலகம் இருக்கிறது. பிரச்சனை என்றால் கேட்பதற்கு நிறுவன ஊழியர்கள் இருக்கிறார்கள். உண்மையில் மிகத் தாமதமாக வந்துள்ளேன்” என நினைக்கிறேன் என்றார்.

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது அலுவலகங்களில் முழுமையான நிர்வாக கட்டமைப்போடு குழு குழுவாக தங்களை அணுகும் சந்தாதாரர்களுக்கு வழிகாட்டி உதவி கள் செய்துகொண்டிருந்தபோது அவரது பதில் அனுபவப்பூர்வ எதார்த்த மாக இருந்தது. மாவட்டத்தின் எல்லா பிஎஸ்என்எல் சேவை மையங்களிலும் ஏர்செல் சந்தாதாரர்கள் தங்களது ஆளறிச் சான்றுகளுடன் அதே எண்ணில் பிஎஸ்என்எல் சேவையை பெற வந்த வண்ணம் உள்ளனர். இதுபற்றி தஞ்சாவூர் மாவட்ட தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் வினோத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, எங்கள் சேவை மையங்களில் ஏர்செல் சந்தாதாரர்கள் தாமதமின்றி மொபைல் எண் பெயர்ச்சி (மொபைல் நம்பர் போர்டபிளிட்டி) சேவையை பெறும் வகையிலும் குழுபணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தட்டுப் பாடின்றி போதுமான சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். நாங்கள் வழங்கும் பிஎஸ்என்எல் சிம்கார்டுகள் தாமதமின்றி ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும். தங்களது மொபைல் எண் பெயர்ச்சியை நாடி ஏராளமான ஏர்செல் சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் சேவை மையங்களுக்கு தினமும் வருகிறார்கள். இவர்கள் அனைவரின் புகார்கள் ஏர்செல் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்தி வரவில்லை என்பதுதான். அதாவது மெபைல் எண் பெயர்ச்சிக்குத் (மொபைல் நம்பர் போர்டபிளிட்டி) தேவையான தனித் தொலைத்துறை குறியீடு (யூனிக் போர்ட் கோட்)சம்பந்தப்பட்ட ஏர்செல் நிறுவனத்திட மிருந்து குறுஞ்செய்தியாக வர வில்லை என்பதுதான் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவிக்கும் முக்கிய புகார். ஏர்செல் நிறுவனத்திடமிருந்து இந்தஎண் வந்தால்தான் நாங்கள் அதே எண்ணில் தொலைத்தொடர்பு சேவையை அளிக்க முடியும்.பிஎஸ்என்எல்-ஐ பொறுத்தவரையில் பழைய ஏர்செல்சந்தாதாரர்களுக்கு சிம் வழங்கு வதிலும் அதே மொபைல் எண்ணில் ஆக்டிவேட் செய்வதில் பிஎஸ்என்எல்-க்கே உரித்தான பாரம்பரியமான வெளிப்படையான நேரிடையான கனி வான எவ்வித தாமதமில்லா சேவை விரைவாக வழங்கப்பட்டு வருகிறது என்று பொது மேலாளர் வினோத் கூறினார்.

நன்றி தீக்கதிர் 3-3-18

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031