ரிலையன்ஸூக்கு ஆதரவாக ‘டிராய்’ டெலிகாம் நிறுவனங்கள் குற்றச்சாட்டு

ரிலையன்ஸூக்கு ஆதரவாக ‘டிராய்’ டெலிகாம் நிறுவனங்கள் குற்றச்சாட்டு

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் TRAI)) செயல்படுவதாக ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

புதிதாக வந்துள்ள (ஜியோ) தொலைத் தொடர்பு நிறுவனங்களின் விதிமீறல்களை, டிராய் கண்டுகொள்ளாமல் விடுவதாலேயே, ஏர்செல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் கூட திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் உடனான போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்களே திணறி வருகின்றன.

தற்போது வேறுவழியின்றி, ரீசார்ஜ் பேக்குகள் மீது இந்த நிறுவனங்களும், விலைக்குறைப்பையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. ஏர்டெல் நிறுவனத்தின் மிகப் பெரிய முதலீட்டாளரான சிங்டெல், சிலமாதங்களுக்கு முன்பு ரூ. 2 ஆயிரத்து 649கோடியை கையிலிருந்து போட்டது. அப்படி யிருந்தும் ஜியோவுக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை.மற்றொரு புறத்தில், போட்டியைச் சமாளிக்க முடியாத ஏர்செல், திவாலாகி விட்டது.

ஏப்ரல் 15-ஆம் தேதியுடன் ஏர்செல்மூடப்படுவதாக டிராய் அமைப்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், “டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடி வருவதாகவும், அதிலும் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள், விலைக்குறைப்பு, சலுகைகளில் எந்த எல்லைக்கும் செல்வோம்” என்று இருப்ப தாகவும் கூறியுள்ளார். இதனை தொலைத்தொடர்பு ஒழுங் காற்று ஆணையமான ‘டிராய்’ கண்டுகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர், இதுதொடர்பாக நீதி மன்றத்தில் முறையிடுவதைத் தவிர, தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் புலம்பியுள்ளார்.தங்களின் இந்த முடிவை அறிந்த டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா, “டெலிகாம் நிறுவனங்கள் தாராளமாக நீதிமன்றம் சென்று தீர்ப்பு வாங்கி வரட்டும்” என்று கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். “சர்மாவின் கருத்து எங்களை (டெலிகாம் நிறுவனங்களை) ஏமாற்றம்கொள்ள வைத்துள்ளது” என்று குறிப்பிட்டு ள்ள மிட்டல், “எவ்வளவு காலம்தான் கையில் இருந்து முதலீடு செய்வது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும் கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் ஆவேசப்பட்டுள்ளார்.வோடாபோன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விட்டோரியோவும், சுனில் மிட்டலின் கருத்தை ஆதரித்துள்ளார்.

இந்திய தொலைத்தொடர்பு ஆணைய மானது, கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி ரீசார்ஜ் பேக்குகள் மீது கொண்டு வந்துள்ள புதியவிதிகள், டெலிகாம் சந்தையில் 30 சதவிகி தத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது, குறிப்பாக,‘ரிலையன்ஸ் ஜியோ’ நிறுவனத்திற்கு சாதகமாக உள்ளது என்பதுதான் பொதுவாக டெலிகாம் நிறுவனங்களின் குற்றச்சாட்டு. ஜியோ நிறுவனத்திற்கு 13 முதல் 14 சதவிகிதம் வரையிலான சந்தை வருவாய் மற்றும் பயனர்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் – ஐடியா நிறுவனங்களுக்கு 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளனர்.இந்நிலையில், இந்த நிறுவனங்கள் எவ்வளவுதான் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முயன்றாலும் புதிய விதிகள் ஜியோ-விற்குச் சாதகமாகவே உள்ளது என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb   Apr »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031