ஊதிய மாற்றம் நமது உரிமை-கூடுதலாக பங்கேற்போம். மாநில சங்க அறை கூவல்

ஊதிய மாற்றம் நமது உரிமை-கூடுதலாக பங்கேற்போம். மாநில சங்க அறை கூவல்

ஊதிய மாற்றத்தை அடைந்தே தீருவோம் என்ற உறுதியுடன் நமது போராட்டம் வெற்றிகரமாக நான்காவது நாட்களாய் நடந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நமது சத்தியாகிரக போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மட்டுமல்லாமல் மாவட்டங்களில் பல பகுதிகளில் இந்த போராட்டம் வீறு கொண்டு நடைபெற்று வருகின்றது. கேளாக்காதினராய் இருப்போரை இந்த போராட்டத்தின் மூலம் கேட்க வைப்போம். மேலும் உறுதியுடன் இந்த போராட்டத்தை கொண்டு செல்வோம். சத்தியாகிரக போராட்டங்களில் கூடுதலாக ஊழியர்களையும் அதிகாரிகளையும் பங்கேற்க செய்வோம். நமது ”விதிப்படி வேலை” என்ற இயக்கத்தை தீவிரப்படுத்துவோம். ”இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை” என்ற உணர்வுடன் நமது இயக்கங்களை தீவிரமாக செயல்படுத்துவோம். இறுதி வெற்றி நமதே. நமக்கு உரிமைப்பட்ட ஊதிய மாற்றத்தை பெற்றிடுவோம். நமது உயிரினும் மேலான BSNLஐ பாதுகாத்திடுவோம்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

February 2018
M T W T F S S
« Jan   Mar »
 1234
567891011
12131415161718
19202122232425
262728