அனைத்தையும் வருமான வரித்துறை எப்படிக் கண்காணிக்கின்றது

வங்கி கணக்குகளில் செய்துள்ள டெபாசிட் முதல் அனைத்தையும் வருமான வரித்துறை எப்படிக் கண்காணிக்கின்றது.

வங்கியில் டெபாசிட் செய்த பணம், கிரெடிட் கார்டு பில் முதல் சொத்து பரிவர்த்தனைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற உட்பொருட்கள் உட்பட அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜனவரி 17-ம் தேதி வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிகையில் நிதி பரிவர்த்தனைகள் தகவல் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும். இதற்கு வருமான வரித்துறை மின்னணு பிளாட்ஃபார்ம் மூலம் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பரிவர்த்தனை தகவல்களைச் சேகரிக்கும்.

எனவே இங்கு நாம் வருமான வரித்துறை எப்படி எல்லாம் 10 லட்சத்திற்கும் அதிகமாகப் பரிவர்த்தனைகள் செய்ததை எப்படி எல்லாம் கண்காணிக்கின்றது என்று பார்ப்போம்

வங்கி டெபாசிட்

ஒரு தனிநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக டெபாசிட் செய்துள்ளாரா என்ற விவரங்களை வங்கிகள் அளிக்க வேண்டும். இந்த விதி நடப்புகணக்குகளுக்கு பொருந்தாது

நிரந்தர வைப்பு நிதி கணக்கு

நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் தனிநபர் ஒருவரால் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஒரே நிதி ஆண்டில் முதலீடு செய்யப்பட்டு இருந்தால் அதற்கான விவரங்களியும் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படும். இதில் ரெனிவல் கணக்குகள் பொருந்தாது

கிரெடிட் கார்டு பில்

1 லட்சத்திற்கும் அதிகமான பண பரிவர்த்தனை மற்றும் அதிக கிரெடிட் கார்டு பில் போன்றவை 10 லட்சத்திற்கும் அதிகமாகச் செல்லும் போது கண்காணிக்கப்படும். இதில் செக் பரிவர்த்தனை, மின்னணு பரிவர்த்தனை இரண்டும் கணக்கில் கொள்ளப்படும்.
2.5 லட்சம்

நவம்பர் 2016 முதல் டிசம்பர் 30 வரை வங்கி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரூபாஉ நோட்டுகளை டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் வருமான வரித்துறை கண்காணித்து வருகின்றது.

நடப்பு கணக்குகள்

பெரும் மதிப்பு உடையப் பழைய ரூபாய் நோட்டுகளை நடப்பு வங்கி கணக்குகளில் 12.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் டெப்பாசிட் செய்யப்பட்டுள்ளதான என்றும் வருமான வரித்துறை கண்காணித்து வருகின்றது.
2016 ஏப்ரல் முதல் வங்கி கணக்குகள் கண்காணிப்பு

2016 ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் 8-ம் தேதி வரை அனைத்து வங்கி கணக்குகளிலும் டெபாசிட்செய்யப்பட்டு உள்ள விவரங்களை ஜனவரி 31-ம் தேதிக்குள் வங்கிகள் வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டும்.

நிறுவனங்கள்

நிறுவனங்கள் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக யாருக்கேனும் அளித்து இருந்தால் அதற்கான ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும். இது பாண்டு அல்லது கடன் எப்படி இருந்தாலும் சரி.
மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டுகளிலும் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளதா, மீண்டும் முதலீட்டில் இருந்து திருப்பி எடுக்கப்பட்ட தொகை என்ற விவரங்களும் சேகரிக்கப்படும்.
அந்நிய செலாவணி அந்நிய நாணயங்கள் பரிவத்தனை, ஃபோரெக்ஸ் கார்டு பரிவர்த்தனை போன்றவற்றிலும் 10லட்சம் ரூபாய்களுக்கு அதிகமாகச் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.

சொத்து

30 லட்சம் அல்லது அதற்கு அதிகமான பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வாங்கப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

February 2017
M T W T F S S
« Jan   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728