2017இல் இந்தியாவின் நிலை இதுதான்.பொருளாதார ஆய்வறிக்கை .

2017இல் இந்தியாவின் நிலை இதுதான்.பொருளாதார ஆய்வறிக்கை .
  • 2017ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மிகவும் போராட்டமான காலம் என்றே சொல்ல வேண்டும் காரணம் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் களையப் பல மாதங்கள் ஆனாது. இதையடுத்த உடனடியாக நாட்டின் மறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றும் ஜிஎஸ்டி வரியை அமலாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து மாற்றங்களை அறிவித்து வர்த்தகச் சந்தையைப் பதற்றமான சூழ்நிலையிலேயே வைத்திருந்தது. இதனால் வேலைவாய்ப்பு, வர்த்தகம், மக்கள் மத்தியில் குழப்பம், எனச் சொல்லிக்கொண்ட போகலாம். இத்தகைய சூழ்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலை என்ன..? என்பதை விளக்குகிறது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை.

ஜிடிபி வளர்ச்சி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிடிபி பாதிப்புகள் அதிகமாக இருந்த 2017-18 நிதியாண்டு காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சி 6.75 சதவீதம் வரையில் உயரும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.   அதேபோல் 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7-7.5 சதவீதம் வரையில் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

நிதிப் பற்றாக்குறை கடந்த நிதியாண்டுகளில் அதிகமாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2017-18ஆம் நிதியாண்டில் 3.2 சதவீதமாக இருக்கும் எனப் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது

2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் மிதமானதாகவே தொடரும். கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு நுகர்வோர் பணவீக்கம் ஆனது சராசரியாக 3.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. மொத்த விலை பணவீக்கமானது சராசரியாக 2.9 சதவீதமாக உள்ளது. இருப்பினும், சமீப மாதங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்ததால் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளை உயர்ந்துள்ளன. கிராமப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 2016-2017 நிதி ஆண்டில் முக்கிய இடமாக இருந்த பேதினும், நகர்ப்புறங்களில் வீட்டு வசதி த்துறை தற்போதைய நிதி ஆண்டில் பணவீக்கத்திற்கு மிகவும் பங்களித்தது. நுகர்வோர் பணவீக்கமானது கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் மாநில வாரியன பணவீக்கத்தைக் கவனித்ததில் பல மாநிலங்கள் நுகர்வோர் பணவீக்கம் தீவிர வீழ்ச்சி கண்டன. 17 மாநிலங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளால் இது சாத்தியமானது.

தொழிற்துறை வளர்ச்சி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்திய தொழிற்துறை வளர்ச்சியை அதிகளவில் பாதித்தது. 2016-17ஆம் நிதியாண்டில் 4.6 சதவீதமாக இருந்த தொழிற்துறை வளர்ச்சி, 2017-18ஆம் நிதியாண்டில் 3.2 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031