பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை 75.12 ரூபாயாகவும், டீசல் விலை 66.84 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.

 

2015இல் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி லிட்டருக்கு 11 ரூபாய்48 காசுகளாகும். அது தற்போது 19ரூபாய் 48 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 68 சதவீத உயர்வாகும். டீசல் மீது மத்திய அரசின் வரி 4 ரூபாய் 46 காசுகளிலிருந்து 15 ரூபாய் 33 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 243 சதவீத உயர்வாகும். உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்துகொண்டிருக்கும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய மத்திய அரசு 2014இல் அதிகாரத்திற்கு வருகையில் பெட்ரோல் வரி ரூ.9.20 ஆக இருந்தது.இது 2018 ஜனவரியில் ரூ.19.48 ஆகஉயர்ந்திருக்கிறது. அது போல் டீசலுக்குரூ.3.46 லிருந்து ரூ.15.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2014இல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ.105 டாலரிலிருந்து 2018இல் 61 டாலராக குறைந்துள்ளது. சர்வதேச அளவில் விலை குறைந்துகொண்டிருக்கும்போது இந்திய அரசு விலை உயர்த்தி வருவதை நியாயப்படுத்த முடியாது. பெட்ரோல் கம்பெனிகள் தங்களது லாபத்தை அதிகரிக்கவே விலையை உச்சத்துக்கு கொண்டுசெல்லஅனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு நகரங்களில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன அதன்படி. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 75.12 ரூபாயாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து 66.84 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

சிந்தனைகள்

Archives

January 2018
M T W T F S S
« Dec   Feb »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031