Author: bsnleungc

March 22 பகத்சிங் நினைவு நாள்

மார்ச் 23 – பகத்சிங் நினைவு நாள் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 1931 மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங் மற்றும் அவரது இரு தோழர்கள் தியாகி ராஜகுரு, தியாகி சுகதேவ் லாகூரில் பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்கள். பகத்சிங் தன்னைத் தியாகப்படுத்திக் கொண்ட சமயத்தில் அவருக்கு வயது வெறும் 23தான். இன்னும் வாழ வேண்டிய காலம் மிக அதிகம் இருந்த சமயத்திலும்கூட, பகத்சிங், தன்னுடைய குடும்பத்தாரும், தன்னை மிகவும் நேசித்தவர்களும் விரும்பியபோதிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கருணை எதிர்பார்த்து கடிதம் எதுவும் எழுத மறுத்துவிட்டார். பகத்சிங் காலனிய ஆட்சியாளர்களுக்குக் கடைசியாக எழுதிய மனுவில் (இதனை அவருடைய உயில் என்றும் கூறலாம்), “உண்மையிலேயே வெள்ளையர் என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் – அதாவது காலனிய ஆட்சிக்கு எதிராக யுத்தம் புரிந்தார் என்று என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டின்கீழ் உண்மையாக இருப்பார்களேயானால், என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக, சுட்டுக் கொல்லுங்கள்” என்று எழுதியிருந்தார். மேலும் அந்த...

Read More

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக விதிகளைத் திருத்திய மோடி அரசு

இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான சேவை உரிமம் உள் ளிட்ட சில விதிமுறைகளைத் தொலைத் தொடர்புத் துறை திருத்தியமைத்துள்ளது.இதன்படி, அலைக்கற்றையை ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதற்கான தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட் டுள்ளது.ஏலத் தொகையை, 10 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற முந்தைய நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.அதேபோல, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அளவானது 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறி, மோடிதலைமையிலான மத்திய அரசு,இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது.இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் சுமைஇருப்பதாகவும், தொலைத் தொடர்புத்துறையில் காணப்படும் அதிகப் போட்டி காரணமாக, இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை...

Read More

கூலி குறைவான, நிரந்தரம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில்தான்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள – உலக அளவிலான வேலைவாய்ப்பு குறித்த சமூகப் பார்வை அறிக்கை 2018- பல அதிர்ச்சிகரமான தகவல்களை அளிக்கிறது. உலகிலேயே மிக மோசமான வடிவத்திலான வேலைகளை மிக அதிகமாக செய்பவர்கள் இந்தியர்களாகவே இருக்கிறார்கள் என்கிறது அந்த அறிக்கை. உயிருக்கு ஆபத்தான, கூலி குறைவான, நிரந்தரம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில்தான் என்று அந்த அறிக்கை கவலை தெரிவிக்கிறது. 2009ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஓரிரு ஆண்டுகள் வேலையின்மை விகிதம் சற்று குறையத் துவங்கியது; ஆனால், அதற்குபிறகு வேலையின்மை விகிதம் குறையாமல் நீடித்து, சமீப ஆண்டுகளாக தீவிரமாக அதிகரித்து வருகிறது என்பதையும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தல் கால மோசடி வாக்குறுதிகளை அளித்த மோடி அரசு எங்கே போனது? அவர்களது ‘ஜும்லா’ சந்தி...

Read More

சிந்தனைகள்

Archives

March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031